நைஜீரியாவில் இருந்த ஒரு பாவப்பட்ட சிறுவன், ஹோப். இரண்டு வயதிலேயே, “தீய ஆவி குழந்தை” என கூறி பெற்றோர்கள் தெருவில் வீசி விட்டு சென்றார்கள்.
பட்டினி காரணமாக வயிற்று உலர்ந்து, புழுக்கள் ஊறிய உடலில் துடித்துக் கிடந்த அந்தக் குழந்தையை, டென்மார்க்கைச் சேர்ந்த சமூக பணியாளர் அஞ்சா ரிங்ரென் லோவேன் கண்டெடுத்து உயிர் தந்தார். தண்ணீரும் பிஸ்கெட்டும் கொடுத்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற அந்த உணர்வுப்பூர்வமான தருணம் சமூக ஊடகங்களில் பரவியதன் பின்னர், உலகம் முழுவதும் அந்தக் குழந்தையை “ஹோப்” என அறிந்தது.

அப்போது உலகம் முழுவதும் கண்கள் கலங்க செய்த அந்தக் குழந்தை இன்று 12 வயதானான். கேட்க முடியாதவன் என்றாலும் எழுதுவதில் திறமை மிக்கவன். ஓவியத் திறமையில் சிறந்து விளங்கும் ஹோப்பை, “லிட்டில் பிக்காசோ” என ஆசிரியை அழைக்கிறார்கள். ஆரம்பக் கல்வியை முடித்த ஹோப், இனி கலைத் துறையில் ஒரு பெரிய இடம் பிடிக்க வேண்டும் என்பதே கனவு.
அஞ்சா மற்றும் அவரது கணவர் டேவிட் இணைந்து நடத்தும் நிறுவனம், நூற்றுக்கணக்கான தெருவில் தவிக்கும் குழந்தைகளுக்கு உணவு, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்கி வருகின்றது. “இப்போது ஹோப் நன்றாக பேசக்கூட முடியாவிட்டாலும், மிக புத்திசாலியாகவும், தன்னம்பிக்கையுடன் வளர்கிறான்” என அஞ்சா பெருமையுடன் கூறுகிறார்.
புழுவெளுத்த உடலுடன் மரணத்தோடு போராடிய ஹோப் இன்று, உலகம் முழுவதும் நம்பிக்கையின் சின்னமாக உயர்ந்திருக்கிறார். ஒருவரின் அன்பும் துணையும், ஒரு பச்சிளம் உயிரை எவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உலகிற்கு காட்டும் உயிருள்ள உதாரணம் தான் ஹோப்பின் வாழ்க்கை.
