தன்னலம் கருதாத போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் டெலிவரி ஊழியர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவர் தனது வீட்டின் கதவைச் சரியாகப் பூட்டாமல் அவசரமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு பார்சல் வழங்க வந்த ‘அம்ஜத் அன்சாரி’ என்ற டெலிவரி ஊழியர், கதவு திறந்து கிடப்பதையும், உள்ளே வளர்ப்புப் பூனை ஒன்று இருப்பதையும் கவனித்துள்ளார். உடனடியாக அந்தப் பெண்ணைத் தொலைபேசியில் அழைத்துத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divya Unny (@divyaunnyfilms)

அந்தப் பெண் வீட்டிற்கு வரும் வரை, பார்சலை மட்டும் வைத்துவிட்டுச் செல்லாமல், பூனை வெளியே ஓடிவிடாமலும், வீட்டிற்குள் பாதுகாப்பு கருதியும் வாசலிலேயே காத்திருந்து வீட்டைப் பாதுகாத்துள்ளார். அந்தப் பெண் வீட்டிற்கு வந்து அந்த ஊழியருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவரது மனிதாபிமானத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.