தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பிரபல நடிகர்  விஜயின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இவர் நடிகர் விஜயின் புலி படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இவர் திமுகவில் இணைந்ததிலிருந்தே ஆரம்ப காலம் முதலே விஜய்க்காக உழைத்த ரசிகர்களுக்காக அவர் எதுவுமே செய்யவில்லை எனக்கு குற்றம் சாட்டி வரும் நிலையில் தொடர்ந்து விஜயை விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா அவர் வேறொரு நடிகை உடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டி தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிடி செல்வகுமார் நடிகர் விஜயை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறினார். இது பற்றிய அவர் கூறியதாவது, தயவு செஞ்சு உங்களை நான் கையெடுத்து கும்பிடுகிறேன் விஜயை நம்பி யாரும் ஏமாந்து போயாறதீங்க.

விஜயின் திருப்பாச்சி படத்தை பார்த்துவிட்டு ஒரு பெண் கூறுகிறார் ஒரு அண்ணனாக தங்கைக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்று இதிலிருந்தே தெரிகிறது பெண்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்று. பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு நடிகர் விஜய் அரைகூவல் விடுக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு விஜய் அவமானப்படுத்துகிறார்.

பெண்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கூறும் விஜய் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள பெண்ணுக்கு முதலில் அதனை செய்தாரா.? அந்தப் பெண் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தார் என்றும் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார் என்றும் அவரே வெளியே வந்து கூறியுள்ளார். இதிலிருந்தே சினிமாவில் பெரிய நடிகர்களின் தவறுகள் மறைக்கப்படுகிறது என்பது தெரிகிறது. மேலும் கோர்ட்டுக்கு வந்து அந்த பெண் துணிச்சலாக உண்மையை சொன்னதால் பாரதி கண்ட புதுமைப்பெண் சங்கீதா என்று நான் கூறுவேன் என்றார்.