அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஒரு கட்சியில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தாய் கழகமான அதிமுகவில் மீண்டும் இணைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். மேலும் ஓபிஎஸ் திமுக பக்கம் சென்று நிலையில் அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுக பக்கம் சாய்வது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.