மதிமுக கட்சியில் பல வருடங்களாக துணை பொது செயலாளர் ஆக இருந்த மல்லை சத்யா வைகோ மற்றும் துரை வைகோவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்தக் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் திராவிட வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கினார். இந்த அரசியல் கட்சியினை அவர் முறைப்படியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் மல்லை சத்யா தற்போது சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே மதிமுக திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது மழை சத்யா திடீரென திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
