உத்திரப்பிரதேச மாநிலம் மௌ மாவட்டத்தில், காதலன் கொடுத்த வாக்குறுதியை மீறியதால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் சரயு நதியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலர் வாரத்தின் போது (Valentine Week) நடந்த இந்தச் சம்பவத்தில், ஆற்றில் குதித்த அந்தப் பெண் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துள்ளார். இதைப் பார்த்த கரையில் இருந்த மக்கள் அலறத் தொடங்கினர். அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மீனவர்கள், தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் ஆற்றில் இறங்கி அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.
Valentine weekend in Mau, UP: Girlfriend, upset with boyfriend, jumped into the icy Saryu River. The freezing water k!lled her courage for su!cide—she started swimming out instead. Boatmen spotted her struggling, rowed over & rescued her safely!
pic.twitter.com/pF5p0sSLer— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 12, 2026
காதலனுடனான சிறிய மனக்கசப்பால் எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் ஆற்றில் மூழ்கும் காட்சிகளும், மீனவர்கள் அவரை மீட்பதும் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உரிய நேரத்தில் செயல்பட்டு ஒரு உயிரைக் காப்பாற்றிய மீனவர்களுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், “காதல் தோல்விக்காகவோ, சண்டைக்காகவோ இப்படி உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்காதீர்கள்” எனப் பலரும் சமூக வலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.
