மழைக்காலத்தில் பசுமை பரவுவதோடு, பாம்புகள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டமும் அதிகமாகிறது. சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், பசியால் ஆட்டமடைத்த நாகப்பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு பெரிய தவளைகளை வேட்டையாடி விழுங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஒரு பசுமை நிறைந்த கிராமப்பகுதியில் நடந்ததாக தெரிகிறது. நாகப்பாம்பு தன்னுடைய சக்தியை மீறி, ஒரே நேரத்தில் இரு தவளைகளை விழுங்க முயன்ற நிலையில், அதை ஜீரணிக்க முடியாமல் மிகுந்த சங்கடத்தில் சிக்கியது.

இந்த வீடியோவை cobra_lover_suraj என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. நாகப்பாம்பு மிக கடினமாக போராடி தவளைகளை விழுங்கும் காட்சி அதன் பேராசையை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த செயலால் அது தாங்க முடியாத அளவிற்கு தொந்தரவுக்கு ஆளாகிறது.

இறுதியில், அந்த தவளைகளை திருப்பித் துப்பி விடும் அந்த பாம்பின் நிலை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு லைக் செய்து பகிர்ந்து, வேடிக்கையான கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “அதிகம் ஆசைப்பட்டா இப்படிதான் ஆகும்”, “தேவையை விட அதிகமாக எடுத்துக்கொண்டால் உடம்பே தாங்காது” என நையாண்டி செய்துள்ளனர். மற்றொரு பயனர், “இது நமக்கும் பாடம். வாழ்க்கையில் சக்திக்கு மீறிய பாரத்தை சுமக்க நினைக்கக்கூடாது” என கருத்து பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Süräj Härpäl (@cobra_lover_suraj)

“>

இரண்டு தவளைகளையும் ஒரே நேரத்தில் விழுங்கும் எண்ணம் நாகப்பாம்புக்கு சங்கடமான அனுபவமாக மாறியது. இந்த காட்சி, இயற்கை நமக்கு சொல்லும் நேரடி நெறிமுறை போலவே இருக்கிறது.