பல்கேரியாவின் புகழ்பெற்ற மறைபொருள் நிபுணரான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு குறித்து கணித்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவரது கணிப்புகளின்படி, 2026-ஆம் ஆண்டு மனித வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் 2026-ல் வேற்றுகிரகவாசிகள் முதன்முறையாக பூமியைத் தொடர்பு கொள்வார்கள் என்றும், ஒரு ராட்சத விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது தவிர, உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவு ஏற்படும் என்றும், தங்கம் போன்ற சொத்துக்களின் மதிப்பில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவும் என்றும் அவரது கணிப்புகள் எச்சரிக்கின்றன. மற்றொருபுறம், இயற்கை பேரிடர்கள் மற்றும் உலகளாவிய மோதல்கள் குறித்து பாபா வங்கா கவலை தெரிவித்துள்ளார். பூமியின் நிலப்பரப்பில் சுமார் 7-8% பகுதி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படலாம் என்றும், இது சுற்றுச்சூழல் அமைப்பையே சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டு, அது மூன்றாம் உலகப் போராக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தையும் அவரது கணிப்புகள் விதைத்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை விஞ்சும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்றும், புவிசார் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்றும் இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.
