கொழும்புவில் நடந்த 2026 டி20 உலகக்கோப்பையின் மெகா மோதலில், இந்திய அணியிடம் 61 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களை சரமாரியாக விளாசியுள்ளார். “ஷாஹீன், பாபர், ஷதாப் ஆகியோருக்கான காலம் முடிந்துவிட்டது; இவர்களைத் தூக்கிவிட்டுப் புதிய திறமையாளர்களைக் கொண்டுவர வேண்டிய நேரம் இது” என அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
Time’s up for Shaheen, Babar, and Shadab, Pakistan’s T20 squad needs new performers, not empty wins against weaker sides #T20worldcup
— Mohammad Yousaf (@yousaf1788) February 15, 2026
மேலும், பலவீனமான அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டு கெத்து காட்டுவதை விட்டுவிட்டு, இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும்போதுதான் திறமை தெரியும் என்றும் அவர் சாடியுள்ளார். இந்த மேட்ச்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வெறும் 5 ரன்களுக்கு அவுட் ஆகி ரசிகர்களைக் கோபப்படுத்தினார். ஷதாப் கான் 14 ரன்களில் வெளியேற, பந்துவீச்சில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷாஹீன் அப்ரிடி, வெறும் 2 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கியதுதான் இந்தியா 175 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
#WATCH | Colombo, Sri Lanka: Maqbool, a fan of the Pakistan cricket team, says, "I think it has become a routine matter now. I was a little hopeful that we would win the match and at least give a fight. But it is like a routine matter. We do not have answers to Bumrah. We cannot… https://t.co/PueQP4FwKe pic.twitter.com/9ozcy1bd4R
— ANI (@ANI) February 15, 2026
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிடம் 8-வது முறையாக பாகிஸ்தான் தோற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய முகமது யூசுப், “இனி இவர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை” எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
