பானிபூரி விற்பனையாளரிடம் தனது கையில் அடிபட்டுள்ளதாகக் கூறி, அவரை ஊட்டி விடச் சொன்ன வாலிபரின் வீடியோ இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் கண்டெண்ட் உருவாக்குபவர் ஒருவர், தனது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு பானிபூரி கடை ஒன்றிற்குச் சென்றார். தனது கையில் பலத்த காயம் இருப்பதாகவும், அதனால் பானிபூரியைத் தூக்கிச் சாப்பிட முடியவில்லை என்றும் கூறி கடைக்காரரிடம் உதவி கோரினார்.
ஆரம்பத்தில் சற்றுத் தயங்கிய அந்தப் பானிபூரி கடைக்காரர், வாலிபரின் நிலையைப் பார்த்து மனமிறங்கி, தனது கைகளாலேயே அவருக்குப் பானிபூரியை ஊட்டி விடத் தொடங்கினார். இதற்கிடையே அந்த வாலிபர், “என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?”) என்று கிண்டலாகக் கேட்க, அதற்கு அந்தக் கடைக்காரர் சிரித்துக்கொண்டே, “எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது” என்று பதிலளித்தார்.
View this post on Instagram
இந்த வீடியோ பலரையும் ரசிக்க வைத்தாலும், ஒரு தரப்பினர் சுகாதாரம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளனர். கடைக்காரர் தனது கைகளால் அனைவருக்கும் பானிபூரி விநியோகம் செய்யும் நிலையில், ஒருவருக்கு ஊட்டி விடுவது மற்ற வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும், சுகாதார ரீதியாக இது தவிர்க்கப்பட வேண்டியது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அந்தப் பானிபூரி கடைக்காரரின் மனிதாபிமானத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ‘பிராங்க்’ வீடியோவாக இது எடுக்கப்பட்டிருந்தாலும், மனிதர்களிடையே இருக்கும் உதவும் குணத்தை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
