பொதுவாக மலைப்பாம்புகள் மெதுவாக ஊர்ந்து சென்றாலும், இரையைத் தாக்கும்போது மின்னல் வேகத்தில் செயல்படும். ஆனால், தன்னைத் தாக்க வந்த ராட்சத மலைப்பாம்பின் கழுத்தை, மது போதையில் இருந்த நபர் ஒருவர் நொடிப் பொழுதில் கைகளால் கவ்விப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@therealtarzann) பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு நபர் பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்றின் முன்னால் நிற்கிறார். அவர் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலைப்பாம்பு திடீரென தனது தலையை நீட்டி வினாடிக்கு 3.3 மீட்டர் வேகத்தில் அந்த நபரைத் தாக்க முயன்றது.
View this post on Instagram
சாதாரண நபராக இருந்தால் இந்நேரம் நிலை குலைந்திருப்பார். ஆனால், அந்த நபர் கண் இமைக்கும் நேரத்தில், காற்றில் சீறி வந்த பாம்பின் கழுத்தை லாவகமாகப் பிடித்து ‘லாக்’ செய்தார். பாம்புகளைப் பிடிப்பதில் பயிற்சி பெற்ற வீரர்களை விடவும் அந்த நபரின் வேகம் அதிகமாக இருந்தது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இன்று தவறான ஆளிடம் அந்தப் பாம்பு வம்பு வைத்துவிட்டது” என்று கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர். “மது போதையில் இருந்தாலும் அந்த நபரின் செயல் வேகம் அபாரமாக உள்ளது” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். “வெல்கம் டு ஆப்பிரிக்கா” என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.
