உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வரலாற்றிலேயே முதல் முறையாக இழந்து கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மோசமான தோல்வி குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கடும் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அயர்லாந்து தொடரில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு சர்வதேச அரங்கில் அறிமுகமாகும் வாய்ப்பு வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டிய கவாஸ்கர், மோசமான ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் அவர்களை அணியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட வேண்டும்.
ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20போட்டியிலேயே வைபவை தொடக்க வீரராகவோ அல்லது மூன்றாவது இடத்திலோ கட்டாயம் விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகத்திற்கு அதிரடி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் தொடக்கம் அயர்லாந்தில் சறுக்கினாலும், இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலமான வீரர்களுடன் அணி எப்படி மீண்டு வரப்போகிறது மற்றும் கவாஸ்கர் சொன்னபடி வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது நெட்டிசன்களிடையே சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
