கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையின் போது, ஒட்டுமொத்த காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய போதைப்பொருள் கடத்தல் விபரீதம் ஒன்று அம்பலமாகியுள்ளது. திருச்சூர் எல்லையில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த பெண் ஒருவரின் உடலமைப்பும், அவர் மறைத்து வைத்திருந்த விதமும் பெண் போலீசாருக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பெண்ணை ரகசிய அறைக்கு அழைத்துச் சென்று தீவிர சோதனை நடத்திய போது, அவர் தனது பிறப்புறுப்பில் மறைத்து வைத்திருந்த 2 கிராம் அளவிலான அதிபயங்கர MDMA போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

​கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடம் போலீசார் தங்களது பாணியில் நடத்திய அதிரடி விசாரணையில், கடத்தல் நெட்வொர்க் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவரது நண்பர்கள் உட்பட கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 7 பேரை போலீசார் அடுத்தடுத்து அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் கர்நாடகா மற்றும் தமிழகப் பகுதிகளில் இருந்து கேரளாவுக்குள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

மேலும், சாவக்காடு பகுதியில் உள்ள ஒரு ரகசிய கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 308 கிராம் எடையுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள MDMA போதைப்பொருளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய நெட்வொர்க்கையும் போலீசார் கூண்டோடு பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.