ஐதராபாத்தில் திருமணமான அன்றே புதுப்பெண்ணை அவரது கணவனே நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், கடந்த 2025 ஜூலை மாதம் குக்கட்பள்ளியில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தன்று மாலை பேகம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டிற்குச் சென்றபோது, கணவர் தனது ஐந்து நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அங்கு அனைவரும் மது அருந்தியதோடு, அந்தப் பெண்ணையும் வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளனர். பெண் மயக்கமடைந்த நிலையில், கணவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் நடந்து பல மாதங்களுக்குப் பிறகு, தற்போது பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக முன்வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து கையில் எடுத்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா டிஜிபி-யிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. திருமண பந்தத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் கணவனே செய்துள்ள இந்த வெறிச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
