உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சாகேரி பகுதியில் உள்ள ஆனந்த் நகரில், குடும்ப வன்முறையின் உச்சகட்டமாக மருமகள் ஒருவரை அவரது மாமனார் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்தப் பதறவைக்கும் வீடியோவில், மாமனார் தனது மருமகளின் முடியைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்குகிறார்.
அந்தப் பெண், “என்னை அடித்துக் கொல்கிறாரே.. யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உயிருக்குப் பயந்து கதறி அழுவது காண்போரின் நெஞ்சை உறைய வைக்கிறது. வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பு இல்லாத நிலையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
“मुझे मार रहा है, बचा लो”
ये ससुर है, जो बहू के बाल पकड़ घसीट रहा है. उसे जानवरों की तरह पीट रहा है. बहू चीखते हुए जान बचाने की गुहार लगा रही है.
मामला कानपुर का है. बहू ने पुलिस में शिकायत की है. हालांकि अभी कोई कार्रवाई नहीं हुई. पूरा मामला चकेरी के आनंद नगर इलाके का है. pic.twitter.com/z2BM0P1DL1
— Priya singh (@priyarajputlive) April 11, 2026
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
