மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம் இடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அழிவு பாதையை நோக்கி காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகமாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.