மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது சாலை விபத்தில் காயமடைவோருக்கு ₹1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் ‘பணமில்லா சிகிச்சை’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் 50% உயிரிழப்புகளை தவிர்க்கலாம் எனக்கூறியுள்ள மத்திய அரசு, இந்த திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.