தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முக்கிய திருப்பமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், சவாலான தொகுதியை கைப்பற்றவும் திமுக தலைமை இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றிருந்தார். தற்போது நிலவும் அரசியல் சூழலில் இத்தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுக சார்பில் செந்தில் பாலாஜியும்,
அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனனும் இத்தொகுதியில் களமிறங்குகிறார்கள்.
அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன் களம் இறக்கப்பட்டுள்ளதால், கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
