மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தென்னிந்தியா இந்த முறையும் பாஜகவுக்கு மரண அடி கொடுக்குமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அதிமுக தான் முதன்மையான எதிரி.

பாஜக சித்தாந்த எதிரி. அரசியலமைப்பை காப்பாற்றுவது, பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது தான் தங்களது நோக்கம் என்றும், பிரதமராக மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது பாஜகவுக்கு கூட நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளார்