தமிழக முதல்வர் ஸ்டாலின், மதவாதத்தை தவிர பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் . இது தொடர்பாக பேசிய முதல்வர், ஆட்சிக்கு வந்தாலும் பாஜகவால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. வெறுப்பு அரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் INDIA கூட்டணி குறித்து பேசிய முதல்வர், மத நல்லிணக்கமே எங்கள் வலிமை, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே எங்கள் தேர்தல் உத்தி என்று தெரிவித்துள்ளார்.