முதல்வர் ஸ்டாலின், நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல, எங்கள் மீது எந்த மொழியை திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்போம் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உடைந்ததால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ் மொழி மற்றும் தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் முட்டுக்கட்டை போடப்படுகிறது.

அதற்கு இங்கிருந்து பழனிச்சாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம். தனிப்பட்ட எந்த ஒரு மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல, இந்திக்கும் எதிரி அல்ல, நல்லா புரிஞ்சுக்கங்க இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் திமுகவின் கோரிக்கை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்