தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வெங்காயம் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதால் குடும்ப தலைவிகள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். கடந்த வாரம் ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் இன்று 110 முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெங்காயத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்