ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள ரெட் சதுக்கத்தில் மூன்று ரஷ்யப் பெண்களிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த வலைப்பதிவர் அலி டோகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடமிருந்து வந்த திடீர் பதில் வலைப்பதிவரையும், காணொளியைப் பார்த்த கோடிக்கணக்கான பயனர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த காணொளியில், அலி டோகர் மூன்று ரஷ்யப் பெண்களுடன் உரையாடும் போது, “பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியிருந்தால், யாரைத் தேர்வு செய்வீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
அவர் கேள்வி கேட்ட உடனேயே, உடன்தான் மூன்று பெண்களும் ஒரே குரலில் “இந்தியா” என்று பதிலளித்தனர். இந்த திடீர் பதிலால் வலைப்பதிவர் சில நொடிகள் பேச முடியாமல் திகைப்பில் நின்றார்.
A Pakistani vlogger asks 3 Russian girls who would they marry if given an option between Indian, Pakistani & Bangladeshi, and all the 3 Russian girls choose India pic.twitter.com/PiyJ0Pvfbv
— Lord Immy Kant (@KantInEastt) November 30, 2025
பின்னர், கேமரா நோக்கி நகைச்சுவையாக, “நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்… பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தயவு செய்து கோபப்பட வேண்டாம்,” என்று கூறியுள்ளார்.
ரஷ்யப் பெண்கள் ஒரே நேரத்தில் “இந்தியா” என கூறும் இந்த காட்சி, சமூக ஊடக பயனர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய கலாச்சாரம், அன்பு, மனிதநேயம் போன்றவை உலகளவில் ஏற்படுத்தும் ஈர்ப்பை இந்த வீடியோ வெளிப்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும்இந்த காணொளி இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டு தொடர்ந்து வைரலாகி வருகிறது.
