திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில் பின்புறம் பழமையான லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைதுறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா தொடங்கியது.

அதன்படி யாகசாலை பூஜைகள், புண்ணியாக வாசகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை மூலவர் விமானம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், அலங்கார தீபராதனம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும் 9 மணிக்கு கருட சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.