உலக அளவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மலேசிய அரசும் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மலேசியாவில் சிறுவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியானதால், 18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்க அந்த நாட்டின் அரசு முடிவு செய்தது. இதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்குப் பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், இந்தச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மலேசியாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட உள்ளது.
