தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை, பதிவேற்றம் செய்ய வகுப்பாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் உடல்நலன் சார்ந்த அடிப்படை விவரங்களை தொகுத்து விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள TNSED SCHOOL APP Health and wellbeing என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணியில் முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்திடவும், இவ்விவரங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதால் விரைவில் இப்பணியினை முடித்திட திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.