சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மகளிர் உரிமைத் தொகை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகளிருக்கு 1000 வழங்கும் திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ என பெயர் சூட்டப்படுவதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த பட்ஜெட்டில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தி னை தமிழக அரசு செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 13 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் அரசு அறிவித்திருந்த நிபந்தனைகள் பூர்த்தி ஆகும் பெண்களுக்கு மட்டுமே 1000 வழங்கப்பட இருக்கிறது. இதே விண்ணப்பத்தின் இறுதியில் உறுதிமொழியும் இடம் பெற்றுள்ளது. உங்களுக்கு பணம் கிடைக்குமானு செக் பண்ணிக்கோங்க.