தமிழகம் முழுவதும் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனால் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களை இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசுப் பேருந்து நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு. சீருடை அணிந்திருந்து அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் நடத்துநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.