திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரத்தில் உள்ள அரசுப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து, தமிழகத் தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவக் குழந்தை மரணமடைந்த செய்தி இதயத்தை இடியென தாக்குகிறது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என தனியார் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஏற்பாட்டாளர்களை… pic.twitter.com/aPQ5BGDFGN
— Arunraaj (@arunraajkg) December 16, 2025
அவர் தனது பதிவில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று ஷோ காட்டுவதற்குப் பதிலாக, முதலமைச்சர் அவர்கள் அந்தப் பணத்தை வைத்துப் பள்ளிக் கட்டிடங்களைச் சரி செய்திருக்கலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்தச் சம்பவத்துக்காக அழுவாரா என்றும், இனிமேல் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுப்பாரா என்றும் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
