முதுகலை பல் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை வரும் பிப்.19 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த தேர்வின் முடிவுகள் வரும் ஏப்.18 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.