நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது. இதில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.