புதுடெல்லி: மருந்து நிறுவனங்கள், மருந்துகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு இலவச பரிசுகள், பயணங்கள் உள்ளிட்ட பலவகையான இலவசங்களை வழங்கும் நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை நேற்று நடை பெற்றது.

இந்த மனுவில், மருந்து நிறுவனங்களின் இந்த செயல்கள் நோயாளிகளின் நலனை பாதிக்கக்கூடியவை என்பதால், அதனைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்குள், மத்திய அரசின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், “இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “பல் இல்லாத சட்டத்தால் என்ன பயன்?” என  கேள்வி எழுப்பினர். அதாவது, சட்டம் இருந்தாலும், அதை நடைமுறைக்கு கொண்டு வர செயல்பாடுகள் இல்லையென்றால் அது எவ்வாறு பயனளிக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.