மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் பாச்சோடு பகுதியில், 80 வயது மூதாட்டி  ஒருவரை 28 வயது இளைஞன் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள அநீதி ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை மதியம் வீசிய பலத்த காற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரோஹன் ஆஹர் (28) என்ற கொடூர மிருகம், அவருக்கு உதவுவது போல நடித்து ஏமாற்றித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.

வீட்டிற்குள் சென்றவுடன் அந்த மூதாட்டியை  வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பெண்கள், வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பாட்டியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மூதாட்டியை  சீரழித்த  ரோஹனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குத் தொடர்ந்து ஆபத்துகள் நேர்ந்து வரும் இந்தச் சூழலில், தற்போது 80 வயது மூதாட்டிக்கும் நேர்ந்துள்ள இந்த அவலம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  குற்றவாளிக்குக் கடுமையான மரண தண்டனை வழங்க வேண்டும் என ஆக்ரோஷமாக வலியுறுத்தி வருகின்றனர்.