உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது பிளஸ் 1 மாணவர் சூர்யா சவுகான் கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஆசாத்தின் உடல் அவரது பூர்வீகக் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்குள்ள கிராம மக்கள் உடலை அடக்கம் செய்யக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராமவாசிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆசாத்தின் மாமா சகாபுதீன் உடலை மீண்டும் காஸியாபாத்திற்குக் கொண்டு வந்து அங்கேயே அடக்கம் செய்தார். இந்த நிலையில், ஆசாத்தின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில், அவனது சகோதரர் “நான் நிச்சயம் பழிவாங்குவேன்” என்று சபதம் எடுத்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
<a href=”http://
🔥 शॉकिंग न्यूज
17 साल के सूर्य चौहान की बकरीद के दिन चाकू मारकर हत्या करने वाला आतंकी असद के जनाजे पर सैकड़ों मुस्लिम जुटे, और असद का भाई खुलेआम धमकी दे रहा है — “बदला जरूर लूंगा” 😡
जो आतंकी का मातम मनाता है, वो खुद आतंकी के जितना ही गुनहगार है।
यूपी पुलिस को इन सब पर नजर… pic.twitter.com/EybSNQYHrB
— Manoj Singh (@PracticalSpy) June 2, 2026
“>
இந்தக் கொடூரக் கொலை வழக்கு தொடர்பாக ஆசாத்தின் தந்தை நவாப் உள்ளிட்ட மூன்று குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவது குற்றவாளியைத் தேடி போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், என்கவுண்டரில் பலியான ஆசாத்தின் வீடு உள்ளிட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடைய பல்வேறு சொத்துக்களைப் புல்டோசர் கொண்டு அதிகாரிகள் இடித்துள்ளனர்.
கொல்லப்பட்ட சூர்யாவின் குடும்பத்தினர் கூறுகையில், சூர்யாவும் குற்றவாளிகளும் ஒரே நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ரமலான் பண்டிகையைக் கொண்டாட வருமாறு சூர்யாவை வற்புறுத்தி வரவழைத்த 7 பேர் கொண்ட கும்பல், தங்களது கையில் வைத்திருந்த கத்திகளால் சூர்யாவை ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொடூரமாகக் குத்திக் கொன்றதாக அவனது சகோதரி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
