பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கடந்த மூன்று மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் சட்டம் தற்போது அதனுடைய பற்களை இழந்துவிட்டதாகக் மிகக் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், குற்றவாளிகளின் கை மற்றும் கால்களை வெட்டினால் மட்டுமே ஒருவேளை அவர்கள் சட்டத்தை மதித்து நடப்பார்கள் என்று நீதிபதி தனது தீர்ப்பில் மிகவும் காட்டமான கருத்துக்களை முன்வைத்துள்ளது தற்பொழுது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், சமூக வலைத்தளங்களில் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
