உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையில் தள்ளுவண்டி தள்ளிக்கொண்டு சென்ற வியாபாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி மதியம் நடந்த இந்த கோர விபத்தில், வேகமாக வந்த வேகன் ஆர் கார் மோதிய வேகத்தில் அந்த வியாபாரி சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த வியாபாரி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“>

இந்த விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர், பாதிக்கப்பட்டவருக்கு உதவாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய ஓட்டுநரை பிடிக்கவும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகமாக கார் ஓட்டியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.