தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்தச் சூழலில், தேர்தல் விதிகளை மீறி விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ய முயன்றதாக வேலூர் மேயர் சுஜாதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தடுத்து நிறுத்தியும் காரை நிறுத்தாமல் சென்றதால் அவரது காரைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க மார்ச் 23-ஆம் தேதி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு மேயருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
