தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றவாளியைக் துரிதமாகக் கண்டறிந்து கைது செய்த 25 காவல்துறை அதிகாரிகளைத் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சரவணன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்பணிச் சான்றிதழ்களை வழங்கினார்.மிகக் குறுகிய காலத்தில் நுணுக்கமான புலனாய்வு மேற்கொண்டு, கொலையாளியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்திய இவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியைத் திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வின் போது அவர் வெகுவாகப் புகழ்ந்தார்.
இந்தச் சிறப்பு அங்கீகாரத்தை விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல், எப்போதும்வென்றான் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, மற்றும் சங்கரலிங்கபுரம், புதூர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 25 பேர் பெற்றுக்கொண்டனர். சைபர் குற்றப்பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும் இதில் அடங்குவர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை விரைந்து பிடிப்பதில் காட்டிய தீவிரத்தை பாராட்டிய டி.ஐ.ஜி, இது போன்ற அர்ப்பணிப்பு மிகுந்த பணிகள் பொதுமக்களிடையே காவல்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.
