உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நான்கு வயது சிறுமியை டிஜிட்டல் ரேப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை பள்ளியின் மேலாளர் மற்றும் வேன் ஓட்டுநர் ஆகியோர் தான் செய்துள்ளனர் என்பது கூடுதல் கொடூரம். அதாவது கடந்த 14ஆம் தேதி சிறுமிக்கு அந்தரங்க உறுப்புகளில் கடுமையான வலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளில் காயம் இருப்பது தெரியவந்த நிலையில் சிறுமிக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது அவர் சொன்ன தகவல்கள் பெற்றோரை கலங்க வைத்த நிலையில் அவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் பள்ளி வேன் ஓட்டுனர் முகமது ஆரிப் மற்றும் பள்ளியின் மேலாளர் சந்தீப் குமார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில் டிஜிட்டல் ரேப் என்பது குழந்தையின் அந்தரங்கப் பகுதிகளில் கைவிரல்கள் மற்றும் கால் விரல்களை நுழைப்பதாகும். பிறப்புறுப்பில் கொடூரமாக இப்படி விரல்களை நுழைத்து சித்திரவதை செய்வது டிஜிட்டல் ரேப் என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
