ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்க்கர் மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷாம்புலால் என்பவர் தகாத் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்களின் அந்தரங்க போட்டோக்களை தன்னுடைய செல்போனில் வைத்திருந்த நிலையில் அதனை மாணவர்களிடம் காட்டி அவர்களை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக வந்து தலைமை ஆசிரியரியடம் புகார் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில் அவருடைய செல்போனில் மாணவர்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. அவரை உடனடியாக போலீசார் கைது செய்ததோடு அவர்களின் செல் ஃபோனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
