பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த திவ்யான்ஷு பாண்டே (22) என்ற இளைஞர், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் வியாழன்  இரவு விஷம் குடித்ததால், நண்பர்கள் அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி, இரவு 1.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாம்ஷெட்பூர் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் இது 4-வது தற்கொலை சம்பவமாகும். முன்னதாக, புதன்கிழமை இரவு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ரோகன் ஸ்ரீவஸ்தவா, தனது அறையில் தூக்கிட்டு உயிரிழந்தார். அதே இரவு லேத் மிஷின் ஆபரேட்டர் நாராயண் குமார் என்பவரும் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து வியாழன்  இரவு ஆட்டோ டிரைவர் ஜெய் சிங் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில், அதே நாளில் எம்.பி.பி.எஸ். மாணவர் திவ்யான்ஷு பாண்டே விஷம் குடித்து உயிரிழந்தது, ஜாம்ஷெட்பூர் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நிகழும் தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.