தமிழக அரசியலில் தவெக-வின் அரசியல் என்ட்ரிக்கு பிறகு விவாதங்களும், விமர்சனங்களும் நாளுக்கு நாள் சூடேறி வரும் நிலையில், தற்போது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ள அரசியல் பகடி (Political Satire) அனிமேஷன் காணொளி ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

​சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி அவர்கள், தமிழக வெற்றி கழகத்தை நோக்கி ஒரு கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதில், “அதிமுகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு தாவிய முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மீதும் ஏகப்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

அந்த அரசியல் கறைகளை ‘விஜய்’ என்ற வாஷிங் மெஷின் போக்கிவிடும் போலும்!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார். ​அமைச்சர் ரகுபதியின் இந்த அதிரடி விமர்சனத்தை அடிப்படையாக வைத்து, நெட்டிசன்கள் சிலர் ஒரு கிரியேட்டிவான அனிமேஷன் வீடியோவை உருவாக்கி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வைரல் காணொளியில், ஒரு வாஷிங் மெஷினுக்குள் குட்கா கறை மற்றும் பல்வேறு வழக்கு கறைகள் படிந்த சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் தூக்கி உள்ளே போடுவது போலவும், அவர்கள் நன்றாகத் துவைத்து எடுக்கப்பட்டு, இறுதியில் வெளியில் வரும்போது தவெக (TVK) கட்சியின் கொடி நிற உடையில் பளபளவென வெளிவருவது போலவும் மிக நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”ta” dir=”ltr”>கரை நல்லது… <a href=”https://t.co/U3TPOzSRef”>pic.twitter.com/U3TPOzSRef</a></p>&mdash; U2 Brutus (@U2Brutus_off) <a href=”https://x.com/U2Brutus_off/status/2073011537858441425?ref_src=twsrc%5Etfw”>July 3, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

​அமைச்சர் ரகுபதி சொன்ன பஞ்ச் வசனத்தை அப்படியே அச்சுப்பிசகாமல் வீடியோவாக மாற்றி நெட்டிசன்கள் செய்துள்ள இந்த நெத்தியடி அரசியல் மீம் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, லைக்குகளைக் குவித்து செம்ம வைரலாகி வருகிறது.