இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக அஜித் காயமின்றி உயிர் தப்பினார். ரேஸின் போது வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது.
கார் மீது மோதாமல் இருக்க எவ்வளவோ முயன்றபோதும் காரை கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்து நடந்த பிறகு சர்க்யூட்டில் சிதறிக் கிடந்த கார் பாகங்களை அகற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுடன் இணைந்து அஜித்குமாரும் இணைந்து வேகமாக பாகங்களை அப்புறப்படுத்தினார்.
Commentators about our #AjithKumar say, “He is a fine champion who helps clear the wreckage from the car, and not many drivers would do that.”#AjithKumarRacing pic.twitter.com/RFOniRH8O1
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) July 20, 2025
