பாலிவுட்டின் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் நடிகர் ஷாருக் கான். இவர் ரசிகர்களால் “கிங் “என செல்லமாக அழைக்கப்படுவார். இவருக்கு மும்பையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அதிகம். இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவர்களில் மூத்த மகனுக்கு டைரக்டர் ஆக வேண்டும் என்பது கனவால் அதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார்.
மகள் அமெரிக்கா நாட்டில் ஆக்டிங் ஸ்கூலில் நடிப்பு கற்றுள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான், பதான் போன்ற படங்கள் திரையில் வெளியாகி 1000 கோடிக்கு வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து “தி கிங்” என்ற அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஷாருக்கான் கமிட் ஆகியிருந்தார்.
இந்த படத்தை சுஜோய் கோஷால் இயக்கி ஷாருக்கானின் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஷாருக் கானின் மகள் சுகானா கான் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கி அதன் பணிகள் மும்பையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் படத்தின் அதிரடி ஆக்சன் காட்சி இன்று படமாக்கப்பட்டது. அப்போது சூட்டிங்கில் ஈடுபட்ட ஷாருக்கானுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்கு தசை பிரண்டுள்ளதாக கூறினார். எனவே ஷாருக்கான் ஒரு மாதத்திற்கு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர் ஆலோசனை செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
