தமிழ் சினிமாவில் அறம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கோபி நயினார். இவரிடம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் இயக்குனர் கோபி நயினார் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் கடந்த 2018 ஆம் ஆண்டு என்னுடைய படிப்பை முடித்த பிறகு இயக்குனர் கோபி நயனாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.
அவர் எனக்கு 3 வருடங்களாக சம்பளம் தரவில்லை. இதேபோன்று என்னுடன் பணிபுரிந்த இன்னும் நான்கு பேருக்கு அவர் சம்பளம் கொடுக்கவில்லை. நாங்கள் சம்பளம் பற்றி கேட்டால் திருமணத்திற்கு பெரிதாக செய்கிறேன். இல்லையெனில் படத்தில் நடி என எல்லோருக்கும் போலியாக ஆசை வார்த்தைகளை காண்பிக்கிறார்.
தொடர்ச்சியாக அவர் அப்படியே கூறிவந்த நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். ஒரு பணம் தராவிட்டால் கூட பரவாயில்லை. போனால் போகட்டும். பணம் கூட வேண்டாம் எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று கூறினால் வாழ விடமாட்டேன் என்கிறார் என்று கூறினார். மேலும் அவரின் புகார் தற்போது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
