பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தற்போது லண்டனில் இருகிறார். லண்டன் தெருக்களில் சுற்றித் திரியும் அவரின் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் ரசிகர் ஒருவர் அவரது அனுமதியின்றி வீடியோ எடுக்க முயற்சி செய்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.
அந்தக் காணொளியில், அக்ஷய் குமார் கருப்பு டி-ஷர்ட், ஷார்ட்ஸ் மற்றும் அதே நிற தொப்பியுடன், லண்டன் தெருக்களில் நடந்து செல்கிறார். அப்போது, ஒரு ரசிகர் அவரை மறைவாக வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர், அந்த ரசிகரின் மொபைலைப் பறிக்க முயற்சிக்கும் காட்சியும் காணப்படுகிறது. இதேசமயம், அவருடன் ஒரு வெளிநாட்டுப் பெண்ணும் நடந்து செல்லும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த சிலர், “அவர் யார்?” எனக் கேட்கிறார்கள்.
View this post on Instagram
இந்த சம்பவத்தின் முடிவில், நடிகர் அக்ஷய் குமார் தனது கோபத்தை ஒதுக்கி, ரசிகருடன் சிரித்தபடியே செல்ஃபி எடுத்துக் கொள்கிறார். இதனால், அவரது ரசிகர்கள் மனம் கவரப்பட்டுள்ளனர். இவரது இந்த நடத்தை பெரும்பாலான சமூக வலைதள பயனாளர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. “அனுமதி இல்லாமல் ஒருவரை வீடியோ எடுக்க முடியாது என்பதே நாகரிகத்தின் அடிப்படை” என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், “அவர் ஒரு சாதாரண செல்ஃபி கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வேண்டாமே!” என்றும் கூறியுள்ளனர்.
