வியக்கவைக்கும் சமையல் கலையும், அழகான நகைச்சுவை வேடிக்கைகளும் கலந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடர்ச்சியாக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. மே 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, போட்டியாளர்களின் உணர்வுப்பூர்வமான தருணங்களும், கோமாளிகளின் கலாட்டா நகைச்சுவையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய எபிசோடில் கல்யாண வீட்டு சமையல் என்ற கருப்பொருளில் நடைபெற்ற சமையல் போட்டி, எதிர்பாராத நெகிழ்ச்சி தருணத்தை கொண்டுவந்தது. நடிகை மற்றும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன், கல்லூரி நாட்களில் கமல்ஹாசனை காதலித்தேன் என தெரிவித்துள்ளார்.

“அவர் எனக்கு பிடித்த நடிகர். அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது, என் காதலை வெளிப்படுத்த போனேன். ஆனால் அவர் என்னை ‘தங்கை’ என அழைத்துவிட்டார். அதனால் என் காதலை சொல்லாமல் விட்டுவிட்டேன்” என நெகிழ்ந்தார். இந்த உரையாடலுக்குப் பின்னர், கமலின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்தார். இது ரசிகர்களிடையே உணர்ச்சிப் பெருக்கத்தை ஏற்படுத்தியது.