தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாமக, தமாக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் பல கட்சிகள் அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தமமுக கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தேசிய ஜனநாயக கூட்டணியிடம் பத்து தொகுதிகளின் பெயர்களை கொடுத்துள்ளதாகவும் அதில் நான்கு தொகுதிகளை கேட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பான லிஸ்ட்டை பியூஸ் கோயலிடம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியை சமாதானப்படுத்துவேன் எனவும் அதனை நான் அரசியலாக பார்க்கவில்லை எனவும் பெருமையாக பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.