
குஜராத் மாநிலத்தில் கனமழை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வைரல் ஆகி வருகிறது. குஜராத் மாநிலம் ஜனகாத் பகுதியில் இருந்து வெளியான அந்த காணொளியில் காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று பைக் கார் செல்லும் பரபரப்பான சாலையில் அமைதியாக ராஜநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது.
சாலையில் செல்பவர்களுக்கு அது எந்த அச்சுறுத்தலையும் தீங்கையும் விளைவிக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனாலும் சிங்கம் ஒன்று பரபரப்பான சாலையில் நடந்து செல்வது பார்ப்போரை ஆச்சரியப்பட செய்துள்ளது.
Gujarat is battered with incessant rains with flood like situation in many cities. Even, King of the Jungle is forced to relocate from it's habitat. Pray to God 🙏 for a speedy recovery and normalisation of the cities affected#GujaratRain #GujaratRains pic.twitter.com/5YORSAJnEN
— Syed Saba Karim (@SyedSabaKarim5) July 23, 2023