அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியான தவாங் மாவட்டத்தில், இந்திய ராணுவம் ‘பார்டர் ப்ரூவ் கஃபே’ என்ற புதிய உணவகத்தைத் திறந்து சாதனை படைத்துள்ளது. ஜெமிதாங் என்ற கடைசி எல்லைக் கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய பாலத்தின் மீது வெறும் 31 நாட்களில் இந்த அழகான கஃபே கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
‘ஆபரேஷன் சத்பாவனா’ திட்டத்தின் கீழ், இந்தப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், எல்லைக் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இந்திய ராணுவம் இந்த அதிரடி முயற்சியை எடுத்துள்ளது.இந்த உணவகத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த மோன்பா பழங்குடியின பெண்களே நடத்த உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. இதன் மூலம் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
<a href=”http://
Under #OpSadbhavna, the Indian Army has established Border Brew Café at Jemithang, a first-of-its-kind initiative in Northeast India.
Constructed on a decommissioned Bailey Bridge over Ngyamjang Chu, the cafe will support local communities and strengthen tourism in #Arunachal. pic.twitter.com/GJKCNLdJSb
— MyGov Arunachal Pradesh (@MyGovArunachal) March 19, 2026
“>
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ராணுவத்திற்கும் மக்களுக்குமான உறவை வலுப்படுத்திய இந்தத் திட்டம், இப்போது அருணாச்சல எல்லைகளிலும் முத்திரை பதித்துள்ளது. இனி ஜெமிதாங் பள்ளத்தாக்கின் இயற்கை அழகை ரசிக்க வரும் பயணிகளுக்கு இந்த கஃபே ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக அமையும்.
